மதுரை: பூட்டிய வீடுகளில் கொள்ளை, திருட்டுப் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க வெளியூர் செல்பவர்கள் அருகேயுள்ள காவல் நிலையத்தி லுள்ள புத்தகம் ஒன்றில் தங்கள் முகவரி, தொடர்பு எண் களை எழுதி வைக்கும் 'காவல் துறை கண்காணிக்கும் திட்டம்' ஒன்று ஏற் கெனவே நடைமுறையில் உள் ளது. இருப்பினும், தற்போது மதுரை புறநகர்ப் பகுதியில் பூட்டிய வீடு களைக் குறிவைத்துக் கொள் ளை யர் கள் கைவரிசை காட்டுவது அதி கரிக்கிறது. இதைத் தடுக்க, மாவட்ட காவல்துறை பூட்டிய வீடுகளைக் கண்காணிக்க உதவ 'மதுரைக் காவலன்' என்ற பெயரில் சிறப்பு திறன்பேசி செயலியை நேற்று அறிமுகப்படுத்தியது.
மதுரைக் பசுமலையைச் சேர்ந்த தினேஷ் பாண்டி என்பவர் இச்செயலியை உருவாக்கி, காவல்துறையிடம் வழங்கி உள்ளார். மதுரை சரக டிஐஜி பிரதீப் குமார், காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் ஆகியோர் புதிய சேவைக்கான செயலியை அறி முகப்படுத்தினர். இதுபற்றி திரு பிரதீப் குமார் கூறியதாவது: பூட்டிய வீடுகளைக் கண்காணிக் கும் சேவை, புகார் அனுப்பும் வசதி, காவல்துறை அறிவிப்பு, விழிப் புணர்வு, அவசர சேவை விவரம், உயர் அதிகாரிகள், காவல்நிலையத் தொடர்பு எண்கள் இச்செயலியில் இணைக்கப்பட்டுள் ளன.
'மதுரைக் காவலன்' என்னும் செயலி வெளியீட்டு நிகழ்ச்சியில் இடமிருந்து டிஐஜி பிரதீப் குமார், காவல்துறை கண்காணிப்பாளர் என். மணிவண்ணன், செயலியை உருவாக்கிய தினேஷ் பாண்டி. படம்: ஊடகம்

