ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத் தின் ஜம்வா ராம்சார் தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் போட்டி யிட்டு சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜக்தீஸ் நாராயணன் மீனா (படம்). இவருக்கு நான்கு மகன்கள். மூத்த மகன் ராம்கி ஷன் பிளஸ்=2 வரை படித்துள்ளார். அதற்கு மேல் கல்வியைத் தொட ராத ராம்கி ஷன் தனது சகோதரர் களுடன் சேர்ந்து விவசாயத்தைக் கவனித்து வந்தார். அண்மையில் ராஜஸ்தான் மாநி லத்தில் குழு=4 தேர்வு நடந்தது. அந்தத் தேர்வெழுதிய ராம் கி ஷ னுக்கு பியூன் வேலை கிடைத் துள் ளது. சட்டமன்றத்துக்கு 18 பியூன் கள் தேர்வு செய்யப்பட்டுள் ளார் கள். அதில் ராம்கிஷனும் ஒரு வர். மற்ற அரசியல்வாதிகளைப் போல் வாரிசை ஏன் அரசியலுக்குக் கொண்டு வரவில்லை என்ற கேள்விக்கு "அவர் அரசியலை விரும்பவில்லை. மேலும் அரசியல் எல்லோரும் கையில் தேநீர் வைத் திருப்பது போல் அல்ல என்றார்," சட்டமன்ற உறுப்பினர் மீனா.
சட்டமன்ற பியூன் வேலையைத் தேர்வு செய்த ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினரின் மகன்
1 mins read
-

