கோத்ராவில் பதிவான வாக்குகளைவிட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகமானது எப்படி?

கோத்ராவில் பதிவான வாக்குகளைவிட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகமானது எப்படி?

1 mins read
c5378a1d-6b2d-4ea9-9da9-eddb76e14b85
-

புதுடெல்லி: குஜராத் சட்ட மன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று அங்கு ஆட்சியமைக்கும் சூழ் நிலையில் காங்கிரசும் அங்கு பாரதிய ஜனதா கட்சியை அச்சுறுத் தும் வெற் றியை ருசித்த நிலையில் கோத்ரா தொகுதி குறித்து பிரியங்கா காந்தி முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்ப தாவது: கோத்ரா தொகுதியில் மொத் தம் எண்ணப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை 1,78,911. ஆனால் மொத்தமாக பதிவான வாக்கு களோ 1,76,417. இங்கு பாஜக வேட்பாளர் 258 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். பதிவான வாக்குகளைக் காட்லும் அதிக வாக்குகள் எண் ணப்பட்டது எப்படி? அதுவும் வித்தியாசம் 2,494 வாக்குகளா? இவ்வாறு கேள்வி எழுப்பி யுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் பிரியங்கா காந்தி. படம்: ஊடகம்