லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடிப்பதால் இறப்ப வர்கள், கண், உடல் உறுப் பு களை இழப்பவர்களின் எண் ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலமான அரியா னா வில் இருந்து கள்ளச்சாராயம் கள்ளத்தனமாக கொண்டு வரப் படுகிறது. கடந்த ஜூலை மாதம் ஆசம்கார்க் மாவட்டத்தில் 17 பேரும் லக்னோவில் 28 பேரும் கள்ளச்சாராயம் அருந்தி இறந் தனர். மேலும், இட்டா, பருக்காபாத் மாவட்டங்களில் கள்ளச் சாராயம் அருந்தி 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக தீவிர நட வடிக்கை எடுக்கத் தேசிய மனித உரிமைகள் ஆணையமும் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளது. இதையடுத்து, கடந்த செப்டம் பர் மாதம் புதிய மசோதா ஒன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. அதன்படி, கள்ளச்சாராயம் விற்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். கள்ளச்சாரயம் குடித்து மரணம் ஏற்பட்டால் விற்றவருக்கு மரணத்தண்டனை, ஆயுள் தண் டனை மற்றும் 5 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

