புதுடெல்லி: பாஜகவுக்கு மட்டும் ஒரு திரைப்பட நிறுவனம் இருந் திருந்தால் நிச்சயம் அதற்கு 'லை ஹார்டு' என்றே பெயர் வைக்கப் பட்டிருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித் துள்ளார். 'டை ஹார்டு' என்பது பிரபல ஆங்கிலத் திரைப்படம். அந்தப் பெயரை மாற்றி 'லை ஹார்டு' என ராகுல் குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக நேற்று (வெள்ளிக் கிழமை) காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வுசெய்யப்பட்ட பின்னர், அவரது தலைமையில் முதல்முறையாக அக்கட்சியின் காரியக் குழுக் கூட்டம் நடைபெற் றது. கூட்டத்துக்குப் பின் செய்தி யாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "குஜராத் மாதிரி வளர்ச்சி என்பதே பொய்யானது. குஜராத் மக்களிடம் நான் பேசும்போது வளர்ச்சியே இல்லை என்று தெரிவித்தனர். "பாஜகவின் அடித்தளமே பொய் யா னது. பாஜக தலைவர் அமித் ஷா மகனின் நிதி முறை கேடுகள் குறித்த கேள்விக்குப் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கவில்லை.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி