சென்னை: ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள ஆ.ராசா, கனிமொழி ஆகிய இரு வரும் நேற்று டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தபோது நூற்றுக்கணக்கான திமுகவினர் விமான நிலையத்தில் திரண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் நேரில் வந்து இருவரையும் வரவேற்றார். அப்போது கூடியிருந்த தொண்டர் கள் பல்வேறு முழக்கங்களை எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திமுக மகளிரணியைச் சேர்ந் தவர்கள் நடனமாடியும் 'கனி மொழி அக்கா வாழ்க', 'கழகத் தின் போர்வாள் வாழ்க' என்றெல் லாம் முழக்கமிட்டும் உற்சாகத்து டனும் காணப்பட்டனர்.
கூட்டத் தைக் கட்டுப்படுத்த போலிசார் மிகவும் சிரமப்பட்டனர். விமான நிலையம் அருகே உள்ள பகுதிகளில் ஆங்காங்கே கனிமொழியைப் புகழ்ந்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட் டம் என விமான நிலைய பகுதியே களைகட்டியது. ஆ.ராசா, கனி மொழி ஆகிய இருவருக்கும் ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தனது சகோதரரை ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினார் கனி மொழி. இதையடுத்து ராசாவும் ஸ்டாலினை அணைத்துக் கொண் டார்.
பொன்னாடை போர்த்தி வாழ்த்திய மு.க.ஸ்டாலின். படம்: சதீஷ்

