ஆர்கே நகரில் கொடிநாட்டிய தினகரன்

ஆர்கே நகரில் கொடிநாட்டிய தினகரன்

1 mins read
d4e82960-424c-44a8-a2ab-0d9291fe7603
-

அதிமுக கோட்டையாக இருந்து வரும் ஆர்.கே. நகரில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிமுக, திமுக வேட்பாளர்களைப் பின் னுக்குத் தள்ளி 40,707 வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக பொதுச்செயலாள ராக இருந்த அமரர் ஜெயலலிதா வின் மறைவுக்குப் பிறகு ஆர்.கே. நகருக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலின் வாக்கு எண் ணிக்கை சென்னை ராணி மேரி கல்லூரியில் நேற்று நடைபெற் றது. அதிமுகவைத் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் நினைவு நாளான நேற்று, தினகரன் முன்னணியில் இருந்ததை அவரது ஆதரவாளர் கள் கொண்டாடினார். வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றின் முடிவில் தினகரன் 10,421 வாக்குகளும் அதிமுக 4,521 வாக்குகளும் திமுக 2,383 வாக்குகளும் பெற்றிருந்தனர். அதனை அடுத்து இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை யின்போது அதிமுக, தினகரன் அணியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.