புதுடெல்லி: தேர்தல் விதிமீறல் தொடர்பான வழக்கில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகதாம்பிகா பாலுக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு நீதிமன்றம் உடனடியாக பிணையில் விடுவிக்க அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, உத்தரப்பிரதேச மாநிலத்தின் பான்ஸி பகுதியில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிக வாகனங்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டதாக ஜகதாம்பிகா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து பான்ஸி கோத்வாலி காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக தேர்தல் விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாஜக எம்பிக்கு சிறைத் தண்டனை
1 mins read

