பூகம்பத்தை கிளப்பும் '2ஜி' நூல்

பூகம்பத்தை கிளப்பும் '2ஜி' நூல்

1 mins read

சென்னை: '2ஜி' விவகாரம் குறித்து ராஜா எழுதியுள்ள புத்தகம் அரசியல் பூகம்பத்தை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டில்லி திகார் சிறையில் 15 மாதங்களாக அடைக்கப்பட்டபோது ராஜா '2ஜி' குறித்து புத்தகம் எழுதினார். முன்னதாக தீர்ப்புக்குப் பிறகு புத்தகத்தை வெளியிடுவேன் என்று ராஜா கூறியிருந்தார். அதன்படி தீர்ப்பு வெளியாகிவிட்டது. இதனால் அடுத்த மாதம் '2ஜி' புத்தககம் வெளியிடப்படவுள்ளது. இதில் மன்மோகன் சிங், சிதம்பரம் உள்ளிட்டோர் '2ஜி' விவகாரத்தில் நடந்துகொண்டது பற்றிய பல புதிய விபரங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.