ஓட்டுநர் இல்லா முதல் ரயில்

ஓட்டுநர் இல்லா முதல் ரயில்

1 mins read

புதுடெல்லி: இந்தியாவிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவை டெல்லியில் அறிமுகம் காண்கிறது. 'மஜன்டா லைன்' என்று அந்த மெட்ரோ ரயில் சேவை பல்வேறு நவீன பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகளுடனும் நவீன சமிக்ஞை தொழில்நுட்பத்துடனும் இயக்கப் படவிருக்கிறது. இந்தப் புதிய சேவையை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இது, திரு மோடி தொடங்கி வைக்கும் 3வது மெட்ரோ ரயில் சேவையாகும். இதற்கு முன்னர் ஜூன் மாதத்தில் கொச்சி மெட்ரோ ரயில் சேவையையும் நவம்பரில் ஹைதரா பாத் மெட்ரோ ரயில் சேவையையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

புதிய 'மஜன்டா லைன்' ரயில் சேவை குறித்து விவரித்த அதி காரிகள், கால்காஜி-நொய்டாவை இந்த மெஜன்டா வழித்தடம் நேரடி யாக இணைக்கிறது என்றும் நொய்டாவில் பொட்டானிக்கல் கார்டன் நிலையத்துக்கும் டெல்லி யின் கால்காஜி மந்திர் நிலையத் துக்கும் இடையே மொத்தம் 12.64 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ள மஜன்டா வழித்தடத்தில் மொத்தம் ஒன்பது ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன என்றும் கூறினர். நாட்டிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில் என்ற பெருமையை 'மஜன்டா லைன்' ரயில் பெற்றாலும் ஓட்டுநர் பெட்டிகளில் கண்காணிப்பாளர்கள் அமர்ந்திருப்பார்கள். இந்த நட வடிக்கை அடுத்த இரண்டு ஆண்டுகள் வரை தொடரும்.