கோவை: மாவோயிஸ்ட் இயக்கத்தினரின் நடமாட் டம் அதிகரித்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து கோவை மற்றும் அதனை ஒட்டியுள்ள வனப்பகுதிக ளில் போலிசார் கண் காணிப்பு, சுற்றுக்காவல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த சில மாதங்க ளாகவே கோவை, நீல கிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வனப்பகுதிகளில் மாவோ யிஸ்ட் இயக்கத்தினரின் நடமாட்டம் அதிகரித்துள் ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி களில் போலிசார் மற்றும் அதிரடிப் படையினர் அவ்வப்போது திடீர் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். இதன் பலனாக சில மாவோயிஸ்ட்கள் பிடிபட் டுள்ளனர். குறிப்பாக தமிழக, கேரள எல்லைப் பகுதிகளில் தான் மாவோ யிஸ்ட்களின் நடமாட்டம் அதிகம் உள்ளதாகக் கூறப் படுகிறது.
மாவோயிஸ்ட் நடமாட்டம்: கண்காணிப்பு தீவிரம்
1 mins read

