புத்தாண்டு, கிறிஸ்மஸ்: உற்சாகத்தில் மிதக்கும் மக்கள்

புத்தாண்டு, கிறிஸ்மஸ்: உற்சாகத்தில் மிதக்கும் மக்கள்

1 mins read
820febb8-96b9-4683-a100-75dba349c23f
-

சென்னை: புத்தாண்டு, கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி சென்னையில் உள்ள கடைத் தெருக்கள் களைகட்டியுள்ளன. பிரபல துணிக் கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் விற்பனையகங்களில் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதுகிறது. அடுத்து பொங்கல் பண்டிகையும் வர இருப்பதால் பிரபல நிறுவனங்கள் பல்வேறு தள்ளுபடி, சலுகைகளை அறிவித்துள்ளன. மேலும் புதிய ரக துணிகள் அறிமுகமாகியுள்ளன. இதனால் விற்பனை அளவு வழக்கத்தைவிட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் சனிக்கிழமை மாலை நல்ல கூட்டம் காணப்பட்டது. இவ்வாண்டு நடைபாதை கடைக்காரர்களும்கூட கணிசமான லாபத்தை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம்: சதீஷ்