'செல்ஃபி' மோகத்தால் உயிரிழப்பு: முதலிடம் பிடித்த தமிழகம்

'செல்ஃபி' மோகத்தால் உயிரிழப்பு: முதலிடம் பிடித்த தமிழகம்

2 mins read

சென்னை: 'செல்ஃபி' படம் எடுப் பதால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்தியா வைப் பொறுத்த வரையில் தமிழகம் இந்த விவகாரத்தில் முதலிடத்தில் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 'செல்ஃபி' மோகத்தால் இந்தியாவில் 76 பேர் பலியானதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின் றன. 'செல்ஃபி' உயிரிழப்புகள் தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த இந்திரபிரசாத் தகவல் தொழில் நுட்ப மையம் மற்றும் அமெரிக்கா வின் கார்னிஜிமெலன் பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டன. இதில் கடந்த 2014 மார்ச் தொடங்கி 2016 செப்டம்பர் வரையி லான காலத்தில் 'செல்ஃபி' மோகத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் திரட்டப் பட்டுள்ளன.

அந்த வகையில் உலகம் முழுவதும் 127 பேரின் உயிர்களைப் பறித்துள்ளது 'செல்ஃபி' மோகம். இது இந்தியாவில் மட்டும் 76 பேரை பலி கொண்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் மதுரையைச் சேர்ந்த ஒரு சிறுவன் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றபோது, மலை உச்சியில் இருந்து 'செல்ஃபி' எடுக்க முயற்சித்து, ஆயிரம் அடி பள்ளத்திற்குள் தவறி விழுந்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவன், 120 அடி கிணற்றுக்கு அருகே நின்று 'செல்ஃபி' எடுத்த போது அதன் உள்ளே தவறி விழுந்து இறந்தான். இதன் பின் னர் ஓடும் ரயில் முன்பு, அருவியில் குளித்துவிட்டு அருகே இருந்த ஒரு குன்றின் மீது நின்று 'செல்ஃபி' எடுக்க முயன்று இருவர் பலியாகினர். இந்நிலையில் தமிழகத்தில் செல்ஃபி மோகத் தைக் குறைக்க சமூக ஆர்வலர்கள் பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றனர்.