சென்னை: தமிழகத்தில் பெரும் பாலான சாலைகள், தரம் குறைந்து அமைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் ஒப்பந்தப் பணிகளைப் பெறுவதற்காக அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளது என்றும் பொது மக்களின் பணம் தவறாகப் பயன் படுத்தப்படுகிறது என்றும் குறிப் பிட்ட ஒரு வழக்கின் விசாரணை யின் போது உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் குறிப்பிட்டார். ஊழலைப் பொறுத்தவரையில் தேசிய அளவில் தமிழகம் முதலி டம் பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தன் கவலையை வெளிப் படுத்தினார்.
தரமற்ற சாலையை அமைத்த தாகக் கூறி, தமிழக அரசின் ஒப்பந்ததாரர்கள் பட்டியலில் இருந்து 'நிம்ரோட்' என்பவரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவரது மனுவை விசாரித்தபோதே நீதிபதி வைத்திய நாதன் அதிரடியாக சில கருத்து களைத் தெரிவித்தார். தமிழகத்தில் ஒப்பந்தப் பணி களைப் பெறுவதற்காக அதிகாரி களுக்கு கமிஷன் என்ற பெயரில் லஞ்சம் கொடுக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அவ்வாறு கமி ஷன் தொகை வழங்கப்படவில்லை எனில் பல்வேறு மட்டங்களில் பல விஷயங்கள் நடப்பதில்லை என்றார். "இது துரதிர்ஷ்டவசமான நிலை. அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டியிருப்பதால், ஒப்பந்தப் பணிகளைப் பெறுபவர் கள் தாங்களும் பணம் சம்பாதிப் பதற்காக தரம் குறைந்த பொருட் களைப் பயன்படுத்தி சாலை அமைக்கின்றனர். அந்தச் சாலை விரைவில் சேதமடைகிறது.

