2 லட்சம் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

2 லட்சம் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

1 mins read
227b5ad2-a86a-4a24-acd4-b27cee9ca95e
-

பட்டாசு தொழிலுக்கு ஏற்படும் தொடர் பிரச்சினைகளை நிரந்தர மாகத் தீர்க்க சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை கோரும் வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் சிவகாசியில் நேற்று முதல் காலவரம்பற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்தத்தில் 830 பட்டாசு தொழிற்சாலைகள் ஈடுபட்டுள்ளன. இதனால் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. படம்: ஊடகம்