'டார்ச்' வெளிச்சத்தில் கண் அறுவை சிகிச்சை; மருத்துவ அதிகாரி நீக்கம்

'டார்ச்' வெளிச்சத்தில் கண் அறுவை சிகிச்சை; மருத்துவ அதிகாரி நீக்கம்

1 mins read

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் டார்ச் வெளிச்சத்தில் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பதிலளிக்குமாறு மாநில அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம், உன்னோ மாவட்டத்தின் நவாப்கஞ்சி பகுதியில் உள்ள சுகாதார மையத்தில் மின்சார வசதி இல்லை. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த 32 நோயாளிகளுக்குக் கண் அறுவை சிகிச்சையானது டார்ச் வெளிச்சத்தில் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியின் மருத்துவ அதிகாரியை நீக்கி அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் ஆணையிட்டுள்ளார். "இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்றும் அவர் கூறினார்.