கடும்பனியால் நாடெங்கும் 3,119 ரயில்கள் தாமதம்

கடும்பனியால் நாடெங்கும் 3,119 ரயில்கள் தாமதம்

1 mins read

புதுடெல்லி: பனிமூட்டம் காரணமாக 3,000க்கும் மேற்பட்ட ரயில்கள் காலதாமதமாக இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 1 முதல் டிசம்பர் 21 வரையிலான காலகட்டத்தில் சுமார் 3,119 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இந்நிலையில் வட இந்திய மாநிலங்களில் நேற்று அதிகாலை வேளையில் கடுமையான பனி மூட்டம் நிலவியது. பஞ்சாப், அரியானா, டெல்லி, மேற்கு உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் ரயில், சாலை போக்குவரத்துப் பாதிப் படைந்தது. டெல்லியில் காலை நிலவிய கடும் பனி மூட்டத்தினால் 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 26 ரயில்கள் தாமதமாக வந்து சேரும் என அறிவிக்கப்பட்டது. இதேபோன்று 7 ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது.