சுஷ்மா: பாகிஸ்தானில் ஜாதவ் மனைவி, தாயார் விதவையாக நடத்தப்பட்டனர்

சுஷ்மா: பாகிஸ்தானில் ஜாதவ் மனைவி, தாயார் விதவையாக நடத்தப்பட்டனர்

1 mins read

புதுடெல்லி: குல்பூஷண் ஜாதவை பார்க்கச்சென்ற அவரது மனைவி யையும் தாயாரையும் பாகிஸ்தான் அதிகாரிகள் விதவைகள் போல நடத்தியுள்ளதாக சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்தில் கூறினார். இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ ஷண் ஜாதவ் உளவு பர்த்ததாகக் கூறி அவரை பாகிஸ்தான் கைது செய்து சிறை வைத்துள்ளது. அவருக்குப் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்தியாவின் தலையீட்டால் மரண தண்டனைக்கு அனைத் துலக நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இந் நிலையில் ஜாதவின் குடும்பத்தினர் சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் அவரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். கண்ணாடி தடுப்பு வைக்கப் பட்ட நிலையில் ஜாதவின் மனைவி சேத்தன்குல், தாயார் அவந்தி ஆகியோர் ஜாதவை சந்தித்தனர். இண்டர்காம் உதவியுடன்தான் பேசினர். சந்திக்கும் முன் இரு வரது தாலி, வளையல், நெற்றிப் பொட்டை அகற்றி, ஆடையையும் மாற்ற வைத்துள்ளனர். பாகிஸ்தானின் இந்த செய லுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜாதவ் குடும் பத்தினர் மீது பாகிஸ்தான் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு தாலி, பொட்டு, வளையல் ஆகியவற்றை அகற்றியதற்குக் கண்டனம் தெரி வித்தார். அதிகாரிகள் அவர்களை விதவைகள் போல நடத்தியுள்ளனர் என்று குறிப்பிட்டார்.