'கோயில்களை நள்ளிரவில் திறப்பதற்குத் தடையில்லை'

'கோயில்களை நள்ளிரவில் திறப்பதற்குத் தடையில்லை'

1 mins read

சென்னை: கோயில்கள் நள்ளிரவில் திறக்கப்படுவதற்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதி மன்றம் மறுத்துவிட்டது. புத்தாண்டை ஒட்டி நள்ளிரவில் கோயில்களைத் திறக்க சில ஆலய நிர்வாகத்தினர் முடிவு செய் துள்ளனர். இதன் காரணமாக சென்னை யைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ் வத்தாமன் தாக்கல் செய்த மனுவில் ஆகம விதிகளின்படி இந்து கோயில்கள் கட்டப்பட்டு உள்ளதால் இரவில் கோயில்களைத் திறக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டி ருந்தது.

"இரவு 9.00 மணிக்கு அர்த்த ஜாம பூசைக்குப் பின் கோயில் கள் மூடப்பட வேண்டும். பிரம்ம முகூர்த்தத்தில் அதிகாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் திறக்கப்பட வேண்டும். "சைவ கோயில்களில் சிவ ராத்திரியின்போதும் வைணவ கோயில்களில் வைகுண்ட ஏகாத சியின்போதும்தான் இரவு நேரத் தில் கோயில்கள் திறந்திருக்கும். "அண்மையில் ஆந்திர அரசு புத்தாண்டு தினத்தில் நள்ளிரவில் இந்து கோயில்களைத் திறக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள் ளது. இந்துக்கள் தமிழ்ப் புத் தாண்டு என சித்திரை மாதத்தை கொண்டாடுகின்றனர்.