அதிமுகவிலிருந்து நூற்றுக்கு மேற்பட்டோர் அதிரடியாக நீக்கம்

அதிமுகவிலிருந்து நூற்றுக்கு மேற்பட்டோர் அதிரடியாக நீக்கம்

1 mins read

டிடிவி தினகரன் ஆதரவாளர் களை அதிமுவிலிருந்து நீக்கும் நடவடிக்கை நேற்றும் தொடர்ந்தது. ஆர்கே நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலையைப் பின்னுக்குத் தள்ளி சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்ற அதிர்ச்சி யில் இருந்து மீளாத அதிமுக, தினகரன் ஆதரவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தல் முடிவு வெளியானதுமே தங்க தமிழ்ச்செல்வன் (தேனி), கலைராஜன் (தென்சென்னை), வெற்றிவேல் (வடசென்னை), ரங்க சாமி (தஞ்சை), பார்த்திபன் (வேலூர்), முத்தையா (நெல்லை) ஆகியோர் மாவட்டச் செயலாளர் பதவியிலி ருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். அத்துடன், நாஞ்சில் சம்பத், சிஆர் சரஸ்வதி, புகழேந்தி உள்ளிட்ட பலர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் தினகரன் ஆதரவாளர்கள் 46 பேர் நீக்கப்பட்ட நிலையில் நேற்றும் அந்த நட வடிக்கை தொடர்ந்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங் கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி யும் இதுதொடர்பாக நேற்று கூட் டாக வெளியிட்ட அறிக்கையில் ஒரே நாளில் நூற்றுக்கு மேற்பட் டோர் நீக்கப்படுவதற்கான அறி விப்பு இடம்பெற்று இருந்தது. திருப்பூர், புதுக்கோட்டை, தரும புரி மாவட்டங்களைச் சேர்ந்தவர் கள் நேற்று நீக்கப்பட்டனர். அவர் களில் திருப்பூர் மாவட்ட முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசாமி குறிப்பிடத்தக்கவர்.