பாலியல் தொல்லை: சமயப் பள்ளி நிர்வாகி கைது; 51 சிறுமிகள் மீட்பு

பாலியல் தொல்லை: சமயப் பள்ளி நிர்வாகி கைது; 51 சிறுமிகள் மீட்பு

1 mins read

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் உள்ள ஓர் இஸ்லாமிய சமயப் பள்ளியில் தங்கியிருந்த சிறுமிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறி அதன் நிர்வாகி கைது செய்யப்பட்டார். பள்ளி நிர்வாகி தங்களுக்குப் பாலியல் தொல்லை அளிப்பதாகத் துண்டுச்சீட்டில் எழுதி அங்கிருந்த சிறுமிகள் பக்கத்து வீடுகளில் போட்டுள்ளனர். அண்டை வீட்டினர் போலிசுக்குத் தகவல் தெரிவிக்க, விரைந்து சென்ற போலிசார் சமயப் பள்ளியில் இருந்த சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பள்ளி நிர்வாகி தங்களை அடித்ததாகவும் நடனம் ஆடக் கூறிப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் சிறுமியர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த நிர்வாகியைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்த போலிசார், அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 51 சிறுமிகளையும் மீட்டனர்.