பிரான்சில் 22 இந்திய மாணவர்கள் மாயம்

பிரான்சில் 22 இந்திய மாணவர்கள் மாயம்

1 mins read

புதுடெல்லி: ரக்பி விளையாட்டுப் பயிற்சி வழங்குவதாகக் கூறி கடந்த ஆண்டு பிரான்சுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 22 இந் திய மாணவர்கள் மாயமானதால் அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, அவர்களை அழைத்துச் சென்ற லலித் டேவிட் டீன், சஞ்சீவ் ராய், வருண் சௌத்ரி என்ற மூன்று பயண முகவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர்களது அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பல ஆவணங் களை சிபிஐ கைப்பற்றியது. மாணவர்கள் அனைவரும் பஞ்சாப், ஹரியானா மற்றும் புது டெல்லியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டது. அம்மாணவர்களை பிரான்சுக்கு அனுப்ப அவர்களின் பெற்றோர் களிடம் இருந்து 25 முதல் 30 லட்ச ரூபாய் வரை அந்தப் பயண முகவர்கள் வசூலித்ததாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. "பஞ்சாப்பின் கபூர்தலாவில் உள்ள இரு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் எனக் கூறி, 13 முதல் 18 வயதுக்குட்பட்ட 25 மாணவர்கள் டெல்லி விமான நிலையம் வழியாக பாரிசுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்," என்று சிபிஐ பேச்சாளர் அபிஷேக் தயால் தெரிவித்தார்.