மும்பை தீ விபத்து: ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு

மும்பை தீ விபத்து: ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு

1 mins read
b80f8262-d32b-4b58-be4c-8349de7d494d
-

மும்பை: மும்பையின் லோவர் பரேல் பகுதியில் உள்ள கமலா மில்ஸ் வளாகத்தில் ஒரு கட்டடத் தின் கூரைப்பகுதியில் அமைந் திருந்த '1 அபவ்' எனும் இரவு விடுதியில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த தீ விபத்தில் 14 பேர் பலியாகினர். இதையடுத்து, நகரின் பல பகுதிகளிலும் ஆக்கிர மிப்புக் கட்டடங்களை அகற்றும் பணிகளை மும்பை மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது. கமலா மில்ஸ் வளாகம், ரகு வன்‌ஷி மில்ஸ் வளாகம், ஃபீனிக்ஸ் மால் சுற்றுப்புறம் ஆகிய இடங் களில் உள்ள உணவகங்களும் இரவு விடுதிகளும் விதிகளை மீறி ஆக்கிரமித்துக் கட்டியுள்ள கட்டடப் பகுதிகள் அனைத்தும் இடிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, கமலா மில்ஸ் தீ விபத்து தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் தேடப்படுபவர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.

தீ விபத்து நிகழ்ந்த கமலா மில்ஸ் வளாகம் உட்பட மும்பை நகரின் பல பகுதிகளிலும் ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் 'பொக்லைன்' இயந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டு வருகின்றன. படம்: ஏஎன்ஐ டுவிட்டர்