திருவாரூர்: தமிழகத்தில் தற் போது அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் நல்லக்கண்ணு குற்றம்சாட்டி உள்ளார். மன்னார்குடியில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், தமிழகத்தில் முற்றிலும் செயலற்ற ஆட்சியே நடந்து கொண்டிருப்பதாக விமர் சித்தார். தமிழகத்தின் உரிமைகளுக் காக மத்திய அரசிடம் போராடுவ தற்கு தமிழக அரசு தவறிவிட்ட தாகவும், தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராகச் செயல்படும் மத் திய அரசின் ஊதுகுழலாக அதி முக அரசு மாறிக் கிடப்பதாகவும் நல்லக்கண்ணு குறிப்பிட்டார்.
இத்தகைய நிலை தமக்கு வேதனையை அளிப்பதாகத் தெரிவித்த அவர், தமிழகத்தின் மிக முக்கியமான மாநில சுயாட்சி உரிமைகளை தங்களின் குறுகிய அரசியல் லாபத்திற்காக மத்திய பாஜக அரசிடம் தமிழக அரசு அடகு வைத்து விட்டதாக பகிரங்கமாகச் சாடினார். "கடந்த ஆறு ஆண்டுகளாக காவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறந்து விடப்பட வேண்டிய தண் ணீரை கர்நாடகா அரசு முறை யாகத் திறந்துவிடவில்லை. பருவ மழையும் போதிய அளவு பெய்ய வில்லை. இதனால் பத்து லட்சம் ஏக்கர்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் கருகிவிடும் அபாயகர மான சூழல் நிலவுகிறது. "இந்த ஆபத்தில் இருந்து விவசாயிகளையும் பயிர்களையும் காப்பாற்ற தமிழகத்திற்கு தேவை யான தண்ணீரை கர்நாடகாவில் இருந்து உடனடியாகப் பெறுவ தற்கு முயற்சி செய்ய வேண்டும்," என்றார் நல்லக்கண்ணு.

