சென்னை: ஐந்தாறு பேரின் தவறான எண்ணம் காரணமாக அதிமுக எனும் இயக்கம் பல்வேறு சோதனைகளைச் சந்தித்து வருவ தாக ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் சட்டப் பேரவை உறுப்பினராகப் பதவி யேற்ற பின்னர் அவர் செய்தியா ளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுக என்று தங்களை சொல்லிக் கொண்டவர்களுக்கு ஆர்கே நகர் மக்கள் நல்ல பாடம் புகட்டி இருப்பதாகக் கூறினார். சட்டப்பேரவையில் வாக்கெ டுப்பு நடக்கும்போது, தமது ஆத ரவு எம்எல்ஏக்கள் தங்கள் பணியைச் செய்வர் என்றும், தற் போதைய ஆட்சியை வரும் மார்ச் மாதத்திற்குப் பிறகு ஆட்சியாளர்க ளால் தக்க வைக்க முடியாது என்றும் தினகரன் திட்டவட்ட மாகக் குறிப்பிட்டார். "எங்களுடன் வர நினைப்பவர் களை எத்தனை நாட்கள் கட்டிப் போட முடியும்? சிலரை மட்டும் கட்சியிலிருந்து நீக்கி பயமுறுத்த முடியாது. சுயநலத்திற்காக செயல் படுவதை விட்டு, நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
தினகரன்: வாக்கெடுப்பின்போது ஸ்லீப்பர் செல்கள் வேலையை காட்டுவர்
1 mins read
-

