சென்னை: புத்தாண்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சென்னையில் மட்டும் சுமார் 15 ஆயிரம் போலி சார் குவிக்கப்பட உள்ளதாக மாந கர காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் நடைபெற்ற உயரதிகாரிக ளின் ஆலோசனைக் கூட்டத்தில் புத்தாண்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து புத்தாண்டை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட காவல்துறை வெளி யிட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பொதுமக்கள் ஒத்து ழைக்க வேண்டுமென சென்னை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
புத்தாண்டுக் கொண்டாட்டங் களை நள்ளிரவு 1 மணியுடன் நட்சத்திர தங்கு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் முடித்துக் கொள்ள வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும், உணவு வழங்குதல், மதுபான விற்பனை மற்றும் நடன நிகழ்ச்சிகளையும் அச்சமயம் நிறுத்த வேண்டும் என காவல் துறையின் வழிகாட்டுதல் அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்தகால புத்தாண்டு கொண்டாட்டம். படம்: தகவல் ஊடகம்

