திருமா: மதவாத, சாதிய சக்திகளுக்கு சரியான பாடம்

திருமா: மதவாத, சாதிய சக்திகளுக்கு சரியான பாடம்

1 mins read

தர்மபுரி: ஆர்கே நகர் இடைத் தேர்தலில் பாஜகவின் மறைமுக ஆசியுடன் களமிறக்கப்பட்ட அதிமுக வேட்பாளரை மக்கள் ஏற்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தர்மபுரியில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், தமிழகத்தை சாதி, மத வெறியர்களின் கள மாக மாற்ற சிலர் முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். "தமிழகத்தில் சாதியவாதி களோ, மதவாதிகளோ காலூன்ற முடியாது.

ஆர்கே நகர் இடைத் தேர்தல் முடிவானது பாஜக உள்ளிட்ட மதவாத, சாதியவாத சக்தி களுக்கு மக்கள் அளித்துள்ள பாடம்," என்றார் திருமாவளவன். அதிமுக, பாஜக உறவு என் பது வெளிப்படையானது என்று குறிப்பிட்ட அவர், இடைத்தேர்த லில் தனித்தனியாக வேட்பாளர் களை நிறுத்தினாலும் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என்றார். "பாஜகவின் விருப்பப்படி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறக்கூடாது என்பதற் காகவே நாங்கள் திமுக கூட் டணியை ஆதரித்தோம்," என் றார் திருமாவளவன்.