சென்னை: தமிழகத்தில் மேற் கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்காக தினமும் 40 ஆயிரம் லோடு மணல் தேவைப் படும் நிலையில், மணல் குவாரி கள் மூலம் நான்காயிரம் லோடு மணல் மட்டுமே கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மணல் தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், செயற்கை மணல் விற்பனையில் ஈடுபட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
எம்சாண்ட் எனப்படும் செயற்கை மணலைப் பயன்படுத்த பொது மக்களை ஊக்குவிப்பது என்றும், அம்மணலை மலிவு விலையில் விற்பனை செய்வது என்றும் தமிழக அரசு முடிவெ டுத்திருப்பதாக பிரபல நாளேடு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எம்சாண்ட் செயற்கை மணல் முன் னைவிட மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் கட்டு மானப் பொறியாளர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இது குறித்து அரசிடம் பல்வேறு தரப்பி னரும் முறையிட்டதை அடுத்து, செயற்கை மணலை அரசே விற் பது என முடிவு செய்யப்பட்டி ருப்பதாகத் தெரிகிறது.

