குமரி: புத்தாண்டையொட்டி கன்னியா குமரியில் கடந்த இரு தினங்களாக சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலை மோதியது. வெளிநாட்டுப் பயணிகளும் ஏராளமாகக் குவிந்தனர். கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதி முதல் அய்யப்ப பக்தர்கள் வருகையாலும் வழக்கமான சுற்றுலாப் பயணிகளின் வருகையாலும் கன்னியாகுமரி களை கட்டியது. இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள விடுதிகள் அனைத்தும் தற்போது நிரம்பிவிட்டன. புதிதாக வருபவர்களுக்கு தங்க இடம் கிடைக்காத நிலை காணப்பட்டது. ஒருபுறம் மக்கள் கூட்டத்தால் கன்னி யாகுமரி கடற்கரை நிரம்பி வழிந்தாலும், மறுபக்கம் ஒகி புயல், சுனாமி ஆகிய வற்றை நினைத்து அச்சமாக இருப்பதாக வும் பொது மக்கள் தெரிவித்தனர். படம்: தமிழக தகவல் ஊடகம்
புத்தாண்டு: குமரியில் குவிந்த மக்கள் கூட்டம்
1 mins read
-

