பணம் வசூலிப்பு: சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு

பணம் வசூலிப்பு: சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு

1 mins read

சேலம்: புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி பேரூராட்சி செயல் அலுவலகர்க ளிடம் பணம் வசூலிக்கப்படு வதாக கிடைத்த தகவலை அடுத்து, லஞ்ச ஒழிப்புப் போலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கை சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சோதனையில் லட்சக் கணக்கில் பணம் சிக்கியது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சோதனை நடைபெற் றதால் பரபரப்பு மேலும் அதிகரித்தது.

ஆட்சியர் அலுவலக வளாகத் தின் இரண்டாவது தளத்தில் பேரூராட்சிகள் மண்டல இயக்கு நர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகள், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகள் என மொத்தம் 52 பேரூராட்சிகள் இந்த அலுவலகத் தின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகின்றன. இந்நிலையில் புத்தாண்டு, பொங்கலை ஒட்டி பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் பண வசூலிப்பு நடந்துள்ளது. பணம் வழங்குவதற்காக பலர் மாலை 5 மணியளவில் இந்த அலுவ லகத்தில் கூடியிருந்தனர். சிலர் பரிசுப் பொருட்களும் கொண்டு வந்திருந்தனர்.