வருமான வரி முறையில் 'நேரடி வரி'

வருமான வரி முறையில் 'நேரடி வரி'

1 mins read

புதுடெல்லி: மறைமுக வரியை மாற்றும் அடுத்தகட்ட நடவடிக்கையாக வருமான வரி, கார்ப்பொரேஷன் வரி ஆகியவற்றை நேரடி வரி முறையாக மாற்றும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நிதியமைச்சகம் புதிய நேரடி வரிச் சட்டத்தை வடிவமைக்கும் குழுவை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2009ஆம் ஆண்டு 'டிடிசி' என்று அழைக்கப்படும் நேரடி வரிவிதிப்புத் திட்டத்தை அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான குழு தயாரித்தது. அதனை முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டார். அதில் மக்களுக்குப் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்தப் புதிய திட்டம் வரவுசெலவுத் திட்ட அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு அறிவிக்கப்படும் எனவும் மக்கள் கருத்தைக் கேட்ட பிறகு அமலாக்கப் பணிகள் தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.