புதுடெல்லி: அடர்ந்த பனிமூட்டத் துடன் இருந்த புதுடெல்லியில் புத்தாண்டு தினமான நேற்று 300க்கும் அதிகமான விமானச் சேவைகள் தாமதமாகின. நூற்றுக்கணக்கான பயணி கள் பல மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டியதாயிற்று. 50 மீட்டர் தூரத்துக்கப்பால் பார்க்க முடியாத அளவுக்கு பனிமூட்டம் மோச மானதால் பல விமானச் சேவை கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. புதுடெல்லி மட்டுமின்றி வட இந்தியாவின் வேறு பல பகுதிகளிலும் பனிமூட்டம் கார ணமாக ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன.
புதுடெல்லியில் இருந்து புறப்பட இருந்த உள்நாட்டு, பன்னாட்டு விமானங்கள் நேற்று அதிகாலை முதலே கிளம்ப இயலாமல் போனது. நேற்று காலை சுமார் 11 மணியளவில் விமானச் சேவை கள் தொடங்கின. எனினும் 11 மணிக்கு முன்னதாக பல விமானங்கள் அவற்றுக்கான நேரத்தில் புறப்படாததால் நூற்றுக் கணக்கான பயணிகள் அவதி யுற்றனர். சில விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் நிலைமை மோசமானது.

