தமிழகத்தில் 800க்கும் மேற் பட்ட பள்ளிகளில் ஓர் ஆசிரி யர் மட்டுமே பாடம் கற்பித்து வருவதாக மத்திய குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் சுமார் 820 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றுகிறார். அவரே அந்தப் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களையும் கற்றுக்கொடுக்கிறார். இதேபோல் 37%க்கும் அதிகமான உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் சம்பந்தப் பட்ட பாடப்பிரிவுகளுக்கான ஆசிரியர்கள் இல்லை. 9 முதல் 12ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு பாடத்திற்கும் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் இருக்கவேண்டும். ஆனால் அறிவியல் பாடத்திற்கு 57 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத் திலேயே தற்போது இருப்பதாக வும் அண்மையில் நடத்தப்பட்ட மத்திய குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 800 பள்ளிகளில் ஓர் ஆசிரியர் மட்டுமே பாடம் கற்பிக்கும் நிலை
1 mins read

