மதுரையில் ஜப்பானியர் திருமணம்

மதுரையில் ஜப்பானியர் திருமணம்

1 mins read
3685e23b-5e06-461c-89e5-72c932ee9f38
-

மதுரை: கல்வி நிறுவனம் ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றும் ஜப்பான் தலைநகர் தோக்கியோவைச் சேர்ந்த யூடோ நினாகா, சிகாரு ஒபாதா என்ற பெண்ணைத் தமிழ்க் கலாசாரத்தின் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக தாலி கட்டி திருமணம் செய்துகொண்டுள்ளார். தமிழைத் தெளிவாகவும் தடையின்றியும் பேசக்கூடிய சிகாரு, தமிழ்க் கலாசாரத்தின் மீது அதிக ஈர்ப்பு கொண்ட வர். இந்நிலையில் மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள மண்டபத்தில் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். மங்கள வாத்தியங்கள் முழங்கின. மணமகனுக்கு பட்டு வேட்டி, சட்டை, மணமகளுக்கு பட்டுச்சேலை அணிவிக்கப் பட்டிருந்த நிலையில் கெட்டிமேளம் கொட்ட திருமணம் தடபுடலாக நடந்தது. படம்: ஊடகம்