ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வைப்புத் தொகைகூட வாங்க முடியாத அளவிற்கு திமுக படுதோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து, ஸ்டாலின் செயல் தலை வராக உள்ள வரை திமுகவுக்கு வெற்றி வாய்ப்பில்லை என்று அவரது சகோதரர் மு.க.அழகிரி கருத்துரைத்திருந்தார். அவர் இப்படிப் பேசியது ஸ்டாலின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தினாலும் திமுகவின் ஒருசாரார் 'அழகிரி மீண்டும் கட்சிப் பணியாற்றி னால் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிர காசமாகும்,' என்று கருதுகின்றனர். இதனால், அழகிரிக்கு மீண்டும் கட்சியில் முக்கியப் பொறுப்பு அளிக்க வேண்டும் என்று திமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருவதாக தமிழக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சரி யாகப் பணியாற்றாததுதான் திமுகவின் தோல்விக்குக் காரணம் என்று கூறி, நூற்றுக்கு மேற்பட்ட நிர்வாகிகளைக் கட்சித் தலைமை நீக்கியது. இதனால் அதிருப்திக்குள்ளான அவர் களில் பலர், அழகிரியைத் தொலை பேசியில் தொடர்புகொண்டு பேசி வரு வதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

