ஆண் பொறியாளரைக் கடத்தி கட்டாய திருமணம் செய்ய முயற்சி

1 mins read

பெண்ணைக் கடத்தி, கட்டாய மணம் புரிந்த சம்பவங்கள் பற்றிக் கேள்விப் பட்டிருக்கலாம். மாறாக, ஆடவரைக் கடத்தி கட்டாயத் திருமணம் செய்து வைக்க முயன்ற சம்பவம் இந்தியாவின் பீகாரில் நிகழ்ந்துள்ளது. வரதட்சணை இன்னும் ஒழியாததால் இப்படி ஆணைக் கடத்தி கட்டாய மணம் செய்து வைக்கும் வழக்கம் பல்லாண்டு காலமாகவே பாட்னா மாவட்டத்தில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், அங்குள்ள பந்தாரக் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்துகொள்ளும்படி ஆண் பொறி யாளர் ஒருவர் கடத்தப்பட்டு கட்டாயப் படுத்தப்பட்டார்.

தகவலறிந்து அந்தப் பொறியாளரின் குடும்பத்தார் போலிசை அணுகியதால் அந்த ஆடவர் அந்தக் கட்டாயத் திரு மணத்திலிருந்து தப்பிக்க முடிந்தது. இந்தக் கட்டாய மணத்திற்குப் பெண் வீட்டார் கடந்த ஓராண்டாகவே திட்டம் தீட்டி வந்ததாகக் கூறினார் அந்தப் பொறியாளரின் சகோதரரான அவதேஷ். ஓராண்டுக்குமுன் தங்களுக்கு அறி முகமான சுரேந்திர யாதவ் என்ற நபரே இந்தச் சதியின் பின்னணியில் இருப்பதா கவும் தம் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரம் பார்த்து தம் சகோதரரைக் கடத்திவிட்டதாகவும் அவர் சொன்னார். தலைமறைவான பெண் வீட்டாரை போலிசார் தேடி வருகின்றனர்.