திருவாரூர்: அதிமுகவுக்கு துரோ கம் இழைத்தவர்கள் விரைவில் கட்சியில் இருந்து வெளியேறு வார்கள் என ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மன்னார்குடியில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், துரோகத்தால் பறிபோன இரட்டை இலை சின்னம் மிக விரைவில் தங்கள் வசம் வரும் என நம்பிக்கை தெரிவித்தார். "தேர்தலுக்கு பிறகு சுயேச்சை வேட்பாளரான தினகரன் காணா மல் போய்விடுவார் என எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கூறினர். அவர்களின் கனவு பொய்யாகி விட்டது. அவர்கள் தான் காணாமல் போயுள்ளனர். "சட்டப்பேரவையில் நான் என்ன பேசப்போகிறேன் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். கட்சி எங்கள் வசம்தான் உள்ளது," என்றார் தினகரன்.
துரோகிகள் கட்சியில் இருந்து வெளியேறுவர்: தினகரன்
1 mins read
-

