புதுடெல்லி: யூனியன் பிரதேசமான டெல்லி சார்பில் மூன்று மாநிலங்க ளவை உறுப்பினர்கள் இடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பதவிக்கு வரும் 10- ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், டெல்லி சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை உள்ளதால் மூன்று இடங்களிலும் போட்டியின்றி வெற்றிபெறும் நிலையில் உள்ளது. அக்கட்சி சார்பில் ரகுராம் ராஜன் போட்டியிடுவதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.
மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியில் இருந்து விலகிவிட்டு மாநிலங்களவைக் குச் செல்ல இருப்பதாகவும் கூறப் பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி எனப் பலரது பெயர்கள் அடிபட்டது. இந்நிலையில், அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அக்கட்சி இன்று வேட்பாளர்களை அறிவித் துள் ளது. சஞ்சய் சிங், நாராயன் தாஸ் குப்தா மற்றும் சுஷில் குப்தா ஆகிய மூவர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நாளை இவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று அக்கட்சி கூறியுள்ளது.

