மும்பையில் போராட்டம்; ராணுவம் குவிப்பு

மும்பையில் போராட்டம்; ராணுவம் குவிப்பு

2 mins read
af6f9391-c07d-45ff-9630-bd71826090c9
-

மும்பை: மராட்டிய சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக 200 ஆண்டு களுக்கு முன்பு பீமா கோரே கான் என்ற இடத்தில் மாபெரும் போர் நடந்தது. இதில் 2,500 பேஷ்வா படை யினரும் 500 மகர் படையினரும் கொல்லப்பட்டனர். இதன் நினைவாக பீமா கோரே கானில் வெற்றித்தூண் நிறுவப் பட்டது. ஆண்டுதோறும் ஜனவரி ஒன்றாம் தேதியன்று இந்த நினைவுத் தூணுக்கு தாழ்த்தப் படுத் தப்பட்டோர் (தலித்) ஒன்று திரண்டு வீர வணக்கம் செலுத்து வது வழக் கம். ஆனால் இந்த ஆண்டு பீமா கோரேகான் வெற்றியைக் கொண் டாடுவது தேசத் துரோகம் எனக் கூறி இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

இதை மீறி நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தலித் மக்கள், பீமா கோரே கானில் திரண்டனர். இதனால் அங்கு இரு தரப் பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. மாநிலத்தின் பல்வேறு இடங் களில் அரசுப் பேருந்துகள், வாக னங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. புனே யில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். புனேயில் தேசிய நெடுஞ் சாலையை மறித்து போராட்டம் நடைபெற்றது. மும்பை, அவுரங்கா பாத், தானே நகரங்களுக்கும் கலவரம் பரவியது. மும்பையில் நாற்பதுக்கு மேற்பட்ட வாகனங் களுக்குத் தீ வைக்கப்பட்டன. மும் பையில் பள்ளி கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட் டன. மும்பை புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப் பட்டன. இந்த வன்முறை குறித்து விசார ணைக்கு மகாராஷ்டிர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் நடந்த போராட்டத்தின்போது தலித் அமைப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை போலிசார் கைது செய்து இழுத்துச் செல்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்