கடலில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்

கடலில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்

1 mins read
1ea684bd-57f9-4ef4-897b-178ad2b98a18
-

எண்ணூர் ஆற்றை ஆக்கிரமித்து புதுத்திட்டங்கள் எதையும் செயல்படுத்தக்கூடாது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆறுகள்தான் நமது உயிர் என்றும் ஆறுகள் ஆக்கிரமிக்கப்படுவதை எக்காரணத்தை முன்னிட்டும் அனுமதிக்க இயலாது என்றும் எண்ணூர் பகுதி மக்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் ஆறுகள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எண்ணூர் பகுதி மக்கள் நேற்று கடலில் இறங்கி மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 'ஆறுகளை ஆக்கிரமிக்காதே... வளர்ச்சி வளர்ச்சி என்று எண்ணூர் ஆற்றை வளைத்துப் போடாதே...' என்பன உள்ளிட்ட பல்வேறு கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையில் ஏந்தி இருந்தனர். இப்போராட்டத்தில் பெண்களும் குழந்தைகளும்கூட திரளாகப் பங்கேற்றனர். படம்: சதீஷ்