பாஜக உறவு வேண்டாம்: தினகரன் திட்டவட்டம்

பாஜக உறவு வேண்டாம்: தினகரன் திட்டவட்டம்

1 mins read
cc11f723-cae3-4c48-91f3-accde192c3cf
-

சென்னை: பாஜக தலைமைக்கு தமிழகத்தில் பிடிக்காத நபர் என் றால் அது சசிகலாதான் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அண்மைய பேட்டியில், தாம் அரசியலில் நீடிக்கும் வரை பாஜக வுடன் எக்காரணத்தை முன்னிட் டும் உறவு பாராட்டப் போவதில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். "பாஜக நிச்சயம் எங்களுடன் இணைந்து செயல்பட முன்வராது. அது நடக்காத ஒரு விஷயம். அதே சமயம் அவர்களே வலிய அழைத்தாலும் நாங்கள் போக மாட்டோம். "நான் அரசியலில் இருக்கிற காலம் வரை மதச்சார்பற்ற அணி யில்தான் இருப்பேன். பாஜக வுடன் எந்த காலத்திலும் ஒட்டோ, உறவோ இல்லை," என்று தினக ரன் தெரிவித்துள்ளார்.

பாஜகவினர் மக்கள் மத்தியில் மதவாதத்தையும் சாதியவாதத்தை யும் பற்றி பேசுவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக மக்கள் சாதியைப் பார்த்து ஆதரவு அளிப்பதில்லை என்றார். துக்ளக் ஆசிரியர் குரு மூர்த்தியை ரகசியமாக சந்தித்து, பாஜகவோடு இணக்கமாக போக பேச்சுவார்த்தை நடத்தினீர் களாமே? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், குருமூர்த்தியுட னான சந்திப்பு நட்சத்திர தங்கு விடுதி ஒன்றில் நடந்ததாக ஒப்புக் கொண்டார்.