தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி நேற்று கூட்டிய கூட்டத்தில் 104 அதிமுக எம்எல்ஏக்கள் மட் டுமே வந்திருந்ததால் அவரது அரசு பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தினகரன் தலைமையிலான எம்எல்ஏக்கள் பதவியிழப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சட்டசபையின் தற் போதைய பலம் 216 ஆக உள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட உறுப் பினர் பலம் கொண்ட கட்சிதான் ஆட்சியில் இருக்க முடியும்.
அதாவது 109 உறுப்பினர்கள் தேவை. ஆனால், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திலோ 104 எம்எல்ஏக் கள்தான் பங்கேற்றனர். எடப்பாடி அரசை ஆதரிப்ப தாகக் கூறிவந்த ஏழு எம்எல்ஏக் கள் நேற்று வரவில்லை. அவர் களில் சில அமைச்சர்களும் உள் ளனர். கூட்டத்திற்கு வராததற் கான சரியான காரணத்தை அவர் கள் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஏழு பேரும் தினகரன் ஆதர வாளர்களாக இருக்கக்கூடும் என் றும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு இவர்களை தினகரன் பயன் படுத்தக்கூடும் என்றும் கூறப்படு கிறது.

