டிராபிக் ராமசாமி: குற்றவாளி ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றக்கூடாது

2 mins read
a3c9dbee-6175-41a7-9bcc-4d0c139c0761
-

சென்னை: காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்பதில் மாற்றுக் கருத்தில்லை என பிரபல சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற கடும் எதிர்ப்பு தெரிவி த் துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால், அதிமுக வட்டாரங்களில் அவர் மீதும் கடும் அதிருப்தி நிலவுகிறது. ஆனால் ராமசாமி இத்தகைய எதிர்ப்புகளையும் அதிருப்தியையும் தாம் பொருட்படுத்தப் போவதில்லை என்றும், வழக்கில் இருந்து பின் வாங்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதா வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து அவரது வீட்டை அரசுடைமையாக் கும் பணியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. தமிழக அரசின் முயற்சிக்கு ஏற்கெனவே முட்டுக்கட்டை ஏற்பட் டுள்ள நிலையில், ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற டிராபிக் ராமசாமியும் தன் பங்குக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். "சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அவர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றக் கூடாது," என தமது மனுவில் ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.

முன்பு ஒருமுறை போராட்டம் நடத்திய ராமசாமியை போலிசார் அப்புறப்படுத்திய காட்சி. படம்: தகவல் ஊடகம்