சென்னை: ஆர்கே நகர் தொகுதி மக்கள் பணம் பெற்றுக் கொண்டு வாக்களித்ததாக கூறுவது மிகவும் தவறானது என அத்தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தினகரன் பணத்தின் மூலம் வெற்றி வெற்றதாக அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார் கமல். இது தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி யது. இந்நிலையில் ஆர்கே நகர் தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த தினகரன், செய்தியார்களிடம் பேசினார்.
அப்போது கமல் தெரிவித்துள்ள கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், "கமலின் கருத்து ஆர்கே நகர் மக்களை இழிவுபடுத்துவது போல் உள்ளது. ஆர்கே நகர் மக்கள் பணம் ஏதும் பெறவில்லை," என்றார்.

