பாஜகவின் முகமூடிகளாக செயல்படும் ரஜினி, கமல்: திருமுருகன் காந்தி தாக்கு

பாஜகவின் முகமூடிகளாக செயல்படும் ரஜினி, கமல்: திருமுருகன் காந்தி தாக்கு

2 mins read
7cf69ef4-8fd0-4c90-8835-7ba2f076f230
-

சென்னை: நடிகர்கள் ரஜினி, கமல் ஆகிய இருவருமே பாஜகவின் மறைமுக ஆதரவாளர்கள் என்றும், இருவரும் பிரதமர் மோடியை எதிர்த்து கேள்வி எழுப்ப மாட் டார்கள் என்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், பதவி ஆசை இல்லை என்று சொல்லும் ரஜினிகாந்த், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை முதல்வராக்கு வாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவால் இந்துத்துவாவை நிலைநிறுத்த முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், தாங்களா கவே வாக்கு வங்கியை உருவாக்க முடியாததால் ரஜினி, கமல் போன்றவர்களின் முகமூடிகளைப் பயன்படுத்தி வாக்கு வங்கிகளை உருவாக்கலாம் என பாஜக நினைப் பதாகச் சாடியுள்ளார். "விவசாயிகள் போராட்டம், அணு உலை எதிர்ப்புப் போராட்டம் ஆகியவை எல்லாம் நடந்தபோது ரஜினி என்ன செய்தார்?

இவற்றை எல்லாம் வைத்துத்தான் அவர் மக்களுக்கு வேண்டுமா வேண் டாமா என்பதை முடிவு செய்ய இயலும். "ஓராண்டுக்கு முன்பு இருந்த தெல்லாம் தமிழகத்தில் பிரச்சினை இல்லையா? பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பாராட்டி மோடிக்கு டுவீட் போட்டவர், அனிதா உயிரை மாய்த்துக்கொள்ள காரணமான மத்திய அரசை எதிர்த்து ஏன் பேசவில்லை? தமிழ்நாட்டு சிஸ்டத்தின் தொடர்ச்சி இந்திய சிஸ்டத்தின் தொடர்ச்சி தானே... மத்திய நிர்வாக அமைப்பு ஒழுங்காக இருந்திருந்தால் தமிழக அரசின் நிர்வாக அமைப்பும் ஒழுங்காக இருந்திருக்கும் அல் லவா?" என்று திருமுருகன் காந்தி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். "தமிழகத்தில் பாஜக இரண் டாம் தர அரசியல் செய்கிறது. ரஜினியை நடிகராக மட்டுமே ரசிக் கலாம்," என்றார் திருமுருகன்.