சென்னை: ரஜினியின் ஆன்மீக அரசியலை இந்து மதவாதம் என்று சாடிய திருமாவளவன் ரஜினி ஆட்சி அமைத்தால், ஆர்எஸ்எஸ் ஆட்சி அமைக்கிறது என்று அர்த்தம் என விமர்சித்துள்ளார். சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.ராதா அரங்கில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுதிய 'டாக்டர் அம்பேத்கரின் புத்தக் காதலும், புத்தகக் காதலும்' எனும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இவ்வாறு சொன்னார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் நிலவரமும் மிக மோசமாக இருப்பதாக வேதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்த அறிவிப்பு வெளியான நாளில் தான் வெளியிட்ட அறிக்கை குறித்தும் விளக்கம் அளித்தார்.
சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட ஆன்மீக அரசியல் என ரஜினி கூறியது பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற மதவாத சக்திகளுக்கு எதிரான அரசியலைக் குறிப்பிடு கிறாரா என அந்த அறிக்கையில் தான் கேள்வி எழுப்பியதை நினை வுகூர்ந்தார் திருமாவளவன். ஆனால் அறிவிப்புக்குப் பின்னர் ரஜினியின் செயல்பாடுகள் அவரது அரசியல் நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தனது கேள்விக்கு விளக்கம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ரஜினியின் அரசியல் அறிவிப்பு உரையைப் பார்த்ததாகத் தெரி வித்த திருமா, துக்ளக் ஆசிரியர் 'சோ' தற்போது இல்லாதது வருத்தம் அளிப்பதாகவும் அவர் இருந்திருந்தால் ஆயிரம் யானை பலம் இருந்திருக்கும் என்று ரஜினி குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டியதுடன் அரசியல் அறிவிப் பிற்குப் பிறகு ரஜினி ராமகிருஷ்ண மடம் சென்றதையும் சுட்டிக்காட்டி னார். இதன்மூலம் ரஜினி பேசும் ஆன்மீகம் என்பது இந்துத்துவம், இந்து மதவாதம் என திருமா வளவன் குற்றம்சாட்டினார். மேலும் ரஜினி ஆட்சி அமைக் கிறார் என்றால் ஆர்எஸ்எஸ் ஆட்சி அமைக்கிறது என அர்த்தம் என்றும் அவர் கடுமையாக சாடி னார்.

