தேசிய மொழி அல்லாத 'இந்தி'க்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம்?

தேசிய மொழி அல்லாத 'இந்தி'க்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம்?

2 mins read
e3e9f74a-e129-44f8-80fe-628a0acd57d9
-

தேசிய மொழியும் அல்லாத, அலு வல் மொழியும் அல்லாத இந்தியை ஐக்கிய நாடுகள் மன்றத்தில் இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியாக ஏற்கச் செய்யும் இந்தியாவின் நடவடிக்கையை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் கடுமையாகச் சாடியுள்ளார். இந்தி மொழி ஐநாவின் அதி கார பூர்வ மொழியாக அங்கீகரிக்கப் படுவதால் மற்ற மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமரானால் அவர் எவ்வாறு இந்தியில் பேச வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும் என்று கேள்வியெழுப்பி உள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர்.

மக்களவையில், நேற்று ஐநா வின் அதிகாரபூர்வ மொழியாக இந்தியை ஏற்கச் செய்ய எடுக்கப் பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர் பாக விவாதம் நடந்தது. அப் போது வெளியுறவுத்துறை அமைச் சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில் "இதற்கான நடைமுறை மிக நீண்டது. மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே இந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள் ளப்படும். இதுமட்டுமின்றி, அதற் காக ஆகும் செலவை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு ஆண்டுக்கு 40 கோடி ரூபாய் வரை செலவாகும். 400 கோடி ரூபாயாக இருந்தாலும் நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்தி மொழி பேசும் மற்ற நாடு களும் இதற்கான செலவுத் தொகையை ஏற்கவேண்டும்.

மொரி‌ஷியஸ் போன்ற நாடுகள் இதற்குச் செலவு செய்யத் தயங்கு கின்றன. அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்," எனக் கூறினார். அப்போது குறுக்கிட்ட கேரளா வைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி சசிதரூர் பேசியதாவது: "இந்தி என்பது நமது நாட்டின் தேசிய மொழி அல்ல. இது, அலு வல் மொழி கூட அல்ல என குஜராத் உயர் நீதிமன்றம் கூறியுள் ளது. "இந்நிலையில், இவ்வளவு மெனக்கிட்டு ஐநாவின் அதிகார பூர்வ மொழியாக இந்தியை ஏன் மாற்ற வேண்டும். இதனால் யாருக்கு என்ன பயன்? அப்படி இந்தி அதிகாரபூர்வ மொழியாக ஆக்கப்பட்டால் பிரதமர் நரேந்திர மோடி, வெளி யுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் வேண்டுமானால் ஐநாவில் இந்தியில் பேசலாம்.

ஆனால் எதிர்காலத்தில் தமிழகம் அல்லது மேற்குவங்கத்தில் இருந்து ஒருவர் பிரதமரானால் அதற்கும் வாய்ப்பில்லை. அப்போது இந்தியை அதிகாரபூர்வ மொழியாக் கிய தால் பயனில்லாமல் போகும்," எனக் கூறினார். எனினும் இதற்குப் பதிலளித்த சுஷ்மா ஸ்வராஜ் "ஐநாவின் அதிகாரபூர்வ மொழியாக, இந்தி ஆக்கப்பட்டால் அது தேசத் திற்குக் கிடைத்த கௌரவம். இந்தியா மட்டுமின்றி ஃபிஜி, சுரினாம், மொரி‌ஷியஸ், கயானா உள்ளிட்ட பல நாடுகளிலும் பேசப்படுகிறது," எனக்கூறினார். மொரி‌ஷியஸில் கிரியோல், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, உருது, ஒடியா, போஜ்புரி, சீன மொழியான மாண்டரின் ஆகிய மொழிகள் பேசும் மக்கள் வாழ்கின்றனர். தமிழ் மொழி இலங்கை, சிங் கப்பூர் ஆகிய நாடுகளிலும் இந்தி யாவின் தமிழ் நாடு, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களிலும் அதிகாரத் துவ மொழியாக உள்ளது. மலேசியா, மொரி‌ஷியஸ் போன்ற நாடுகளில் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. தென் னாப் பிரிக்கா, ஃபிஜி போன்ற நாடுகளிலும் தமிழ் பேசப்படுகிறது.