திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயரை மீண்டும் 'ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில்' என மாற்றுவதற்கு திருவாங்கூர் ஆலய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயில், 'ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில்' என அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்டு வந்தது. கேரளாவில் இதே பெயரில் உள்ள கோயில்களில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப் படுகின்றனர். கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு, சபரிமலைக் கோயில் பெயரை "சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்" எனப் பெயர் மாற்றம் செய்தது. இந்நிலையில் சபரிமலைக் கோயில் பெயரை மீண்டும் மாற்ற தற்போதைய இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயில் பெயரை மாற்ற ஆலய நிர்வாகம் முடிவு
1 mins read

