சென்னை: ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தில் கமல்ஹாசன் உற்சாகமாக, உல்லாசமாக கபடி ஆட நினைக்கிறார் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். நிலையில் ரூ.20 டோக்கனுக்கு ஆர்கே நகர் மக்கள் விலை போய் உள்ளது பிச்சை எடுப்பதற்குச் சமம் என்று கமல் கூறியுள்ளார். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட தாகத் தேர்தலுக்கு முன்பே புகார் கள் எழுந்தன. இதுகுறித்து டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்ட தற்கு, "ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தில் கபடி ஆடலாம் எனக் கமல் நினைக்கிறார். கமல் நல்ல நடிகர். நல்ல சிந்தனையாளர் என நினைத்தேன்; ஆனால் வாழ்க்கையில் நடிக்கிறார். கமல் மனநிலையில் தடுமாற்றம் ஏற்பட்டுவிட்டது என நினைக்கிறேன்," என்று கூறினார்.
தினகரன்: வெற்றிடத்தில் கபடி ஆட நினைக்கிறார் கமல்ஹாசன்
1 mins read
-

