பெரம்பலூர்: பார்வையற்ற பெண் ஆசிரியை ஒருவர் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆங் கிலப் பாடம் கற்பித்து அசத்தி வருகிறார். மாணவ, மாணவியருக்கு எளி தில் புரியும்படியும் ஆடிப் பாடியும் எளிமையாக பாடம் நடத்துகிறார். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும் உரையாடவும் பயிற்சி அளிக்கிறார். 'தனியார் பள்ளி மாணவர் களுடன் அரசு பள்ளி மாணவர்கள் போட்டியிடும் வகையில் இவரது ஆங்கிலம் போதிக்கும் திறன் உள்ளது' என அவருடன் பணியாற்றும் சக ஆசிரியர்களே பெரு மிதம் கொள்கின்றனர். பெரம்பலூர் மாவட்டம், பொம் மனப்பாடிக் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை 107 மாணவ, மாணவியர் படிக்கின்ற னர். தலைமை ஆசிரியை உட்பட எட்டு ஆசிரியர்கள் பணிபுரிகின் றனர். இங்கு பாப்பாத்தி, 29, என்ற ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியை 2012ஆம் ஆண்டு முதல் பணி யாற்றி வருகிறார். ஆங்கிலத்தில் எம்ஏ., பிஎட்., முடித்துள்ள பாப்பாத்தி பார்வையற்றவர்.
ஆங்கிலம் கற்பிக்கும் பார்வையற்ற ஆசிரியை பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடம் போதிக்கும் பார்வையற்ற ஆசிரியை பாப்பாத்தி. படம்: ஊடகம்

